Tuesday, August 7, 2007
சனி பெயர்ச்சி 2007
இந்திய தொ(ல்)லைகாட்சிகளில் முதல் முறையாக.. சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள்...மக்கள் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் 3000 பேர்னு எந்த வருஷமும் இல்லாம இந்த வருஷம் சனி பெயர்ச்சிக்கு ஏன் இப்படி ஒரு ஆர்பாட்டம்.அவர் பாவம் ஒரு வீட்லேந்து இன்னுரு வீட்டுக்கு போறாரு 2 1/2 வருஷத்துக்கு ஒரு தடவை.. அப்போ கூட விடமா அவரையே சுத்தி சுத்தி வராங்க இந்த திருவாளர் பொது ஜனம்.திரும்பின பக்கம் எல்லாம் இதே பேச்சு தான்.நேற்று வேலையிலிருந்து வீடு திரும்பும் போது பக்கத்து சீட்டில் இருந்த அம்மணி அவருடைய அப்பாவிற்கு போன் செய்து கேட்கும் முதல் கேள்வி "அப்பா சனி பெயர்ச்சி எப்படி போச்சு?" சிரிப்பதா அழுவதான்னு புரியலை. ஏதோ ஹெல்த் செக்கப் எப்படி போச்சுனு கேக்கற மாதிரி கேட்டாங்க.சனி நம்பள சோதிக்கறது போய் நம்ப அவர சோதிக்காறோம். நான் நாத்திகவாதி இல்லை but this is all hyped up. கொஞ்ச நாளா நண்பர்கள் கிட்டேன்து வர forwarded mail கூட சனி பெயர்ச்சி பலன்கள் தான்.. எங்க போய் முடியுமோ தெரியல.எல்லார்க்கும் கஷ்டமே இல்லாம வாழனும்னு ஆசை.. என்னையும் சேத்துதான். But life is fair to all. Everyone has ups and downs in life and no one is alone in this game.. That is what all these different dasai(phases) in our life indicate. Let us take these as guidelines and do what we got to do to better our lives.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment