வீடு ரெண்டுபட்டது.. ஒரே அமர்களம். நேஹா குளிச்சாசா?
dress பண்ணிண்டாச்சா? அவளுக்கு வேண்டியது எல்லாம் எடுத்து பைல வச்சாசா?
அங்க என்ன கிடைக்குமோ கிடைக்காதோ.. பாவம் எங்களை விட்டு தனியாகவே இருந்ததில்லை.. புது மனிதர்கள் புது இடம். சரியாக சாப்பிடுவாளோ என்னமோ? அங்கே எல்லாரும் அன்பாக பழகுவார்களா?
நான் வேலை வேலை என்று இருந்ததால் ஒன்றும் சொல்லி குடுக்கவில்லை.. என்னை குறை சொல்வார்களோ? என் அம்மா "நான் ரெண்டு பேரை வளர்த்து எல்லாம் செய்யலயா? நீ ஒரு பொண்ணுக்கு இப்படி tension ஆறயே? "
நான் காதிலே வாங்கிக்கொள்ளாமல் அவரிடம் சென்றேன். "வண்டி சரியா வந்துடுமா? நான் இங்க ஒரு ஆளா எல்லாம் பண்றேன்..நீ இப்படி கவலயே இல்லாம internet browse பண்ற?" என்னவர் பாவமாய் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு "time தான் இருக்கேடா... நேஹா எல்லாம் சமத்தா ready ஆய்டுவா.. கவலை படாத" என்றார். இவரிடம் பேசி ஆகப்போரது ஒண்ணுமில்லை.போய் நேஹாவை எழுப்பப் பார்த்தேன்.
Madam Highness அப்போ தான் எழுத்து சோம்பல் முறித்துவிட்டு அம்மா என்றாள்."எழுந்த்ரு.சீக்கரம் கிளம்பு. அப்றம் கொஞ்சலாம்.மொத நாளே கெட்ட பேர் வாங்காதே.." பார்க்க பாவமாய் இருந்தாலும் விரட்டினேன்... அப்படி இப்படி என்று தயாரானாள்.இவள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ன செய்வாளோ என்று எண்ணியபடி நானும் தயாரானேன்.
போகின்ற வழியில் பிள்ளையாரை பார்த்துவிட்டு கிளம்பினோம்.நேஹா எல்லாரிடமும் பேசிக்கொண்டே வந்தாள்.. இடம் இடம் நெருங்க நெருங்க என் கண்களில் ஈரம். எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக
பார்க்க, என் குட்டி தேவதையோ என் உணர்ச்சி புரிந்த்தவளாய் "அம்மா அழாம bye சொல்லு. ஸ்கூல் முடிஞ்ச உடனே நான் வந்துவேன். Miss என்ன பார்த்துப்பா.." ..
ம்.. எல்லாம் கலிகாலம்டா.எனக்கு ஸ்கூல் போறச்சே அழற குழந்தை தான் வேணும்.. யாரவது கேக்கறீங்களா?
பி.கு இது ஒரு கற்பனை கதை. என் பெண்ணிற்கு ஒரு வயதுதான்..
Friday, June 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
dont worry.. she will cry definitely when she goes to school.. it is only an imagination..
but that was a superb imagination
Post a Comment