Saturday, June 27, 2009

ஓடி விளையாடு பாப்பா

அது என்னமோ தெரியல எனக்கும் விளையாட்டுக்கும் எப்போவுமே ஒரு இந்தியா பாகிஸ்தான் உறவு தான்... நான் கொஞ்சம் குண்டாக இருப்பேனா (round is a shape you see)அதுனால ஒத்துவரல போல. வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் விளையாட்டு நேரம். பி.டி master வந்து கைய இப்படி தூக்குங்க கால இப்படி மடக்குங்க rectangle, square, circle எல்லாம் போடுங்கன்னு கொஞ்ச நேரம் உடற்பயிற்சி சொல்லி தருவார். அப்பறம் எல்லாரும் போய் ஓடி புடிச்சு விளையாட ஆரம்பிச்சா பாக்கி நேரம் அவருக்கு எங்களோட சண்டய தீர்த்துவக்கறதுல போய்டும்.கடைசியா "அடுத்த வாரம் இதே நாள் இதே நேரம் சந்திப்போம். அது வரை விடைபெறுவது பாண்டி பாண்டி"னு சொல்லிட்டு போய்டுவார்(அவர் பிறகு மளிகை கடை வைத்தது தனி கதை).

அப்பறம் இந்த sports day. ஓட்டப்பந்தயமும், தலைல பாடப்புத்தகத்தை வைத்துகொண்டு நடக்கும் பந்தயமும் இருக்கும். ஓட்டப்பந்தயம் கூட பரவாயில்ல கடைசிலேந்து மூனாவதுக்குள்ள வந்துடுவேன். ஆனா இந்த ரெண்டாவது இருக்கே அது கொஞ்சமும் பிடிக்கல.. எல்லா பசங்களும் தலை நிறைய எண்ணெய் வைத்துகொண்டு புத்தகம் இல்லாமல் வருவார்கள்(அப்போது தான் புத்தகம் விழாமல் இருக்குமாம்). நம்ப தான் sincere சிகாமணி ஆச்சே.. என் புத்தகம் எல்லாம் எண்ணெய் ஆனதுலேந்து பிடிக்காமல் போனது.இப்படியாக இரண்டு வருடம் போனது.

அப்புறம் lemon and spoon race. வெயிலுக்கு இதமா ஜில்லுனு இதை சாப்டாம பெரிய கொடுமை. பெரிய spoon சின்ன எலுமிச்சை அப்படி இப்படினு தயாரானாலும் "go" சொன்னவுடனே எலுமிச்சை தனக்கு தான் சொல்ராங்கன்னு ஓஓடி போய்டும். அப்பறம் நம்ப திருப்பி தயாராகி திரும்பி பாத்தா சின்ன வகுப்பு பசங்க கூட நின்றுகொண்டு இருப்போம்.

கொஞ்சம் பெரிய வகுப்பு போனதும் ஸ்கிப்பிங். ஒரு எடத்துல ஸ்கிப் பண்ணுனா பரவாயில்லை, ஸ்கிப் பண்ணிக்கொண்டே ஓடவும் ஓடணும்.... ஒரு தடவை பக்கத்தில் வந்து கொண்டிருந்த பெண்ணின் கயிறோடு என் கயிறு லா லா பாட அதோடு என்னை யாரும் அழைத்த‌தில்லை. இதன் பிறகு வந்தது short put நம்ப இதுல புகுந்து விளையாடலாம் (அதாங்க round is a shape..) அப்படின்னு பாத்தா கைவலி வந்ததுதான் மிச்சம். இதுல "தயிர் சாதம்"னு ஒரு புனை பெயர் வேறு ஒட்டிக்கொண்டது.

க‌டைசியா வந்தது ballon bursting. ச‌ம‌த்துவ போட்டி. யார் கால‌ யார் வேணும்னாலும் மிதிக்க‌லாம். ப‌லூன் உடைத்தோமோ இல்லையோ பிடிக்காத‌வ‌ர்க‌ள் காலை ப‌த‌ம் பார்த்தோம்.. ஒரு வ‌ழியா ப‌த்தாம் வ‌குப்பு வந்த‌தும் இனிமே ப‌டிப்பு ம‌ட்டும் தான் என்றார்க‌ள். என்னை போல் மகிழ்ந்த‌வ‌ர் யாரும் இல்லை...



இப்போ anticlimax...

என் ஒரு கையில் சாத‌ம் ம‌று கையில த‌ண்ணீ என் பெண் பின்னால் ஒட்ட‌ம்... ப‌ம்ம‌ல் கே ச‌ம்ப‌ந்த‌த்தில் க‌ம‌ல் சொல்ர‌ மாதிரி ஒரு ப‌க்க‌ம் பொண்ண‌ பிடிக்க‌னும் ஒரு ப‌க்க‌ம் சாத‌ம் குடுக்க‌னும் ஒரு ப‌க்க‌ம் விளையாட்டு காமிக்க‌னும் அப்புறம் dialogue ம் பேச‌னும்னா எப்ப‌டி?? ஒழுங்கா lemon and spoon race விளையாடி இருக்க‌லாம்.என்ன‌ ஒன்னு நேர் கோட்ல‌ ஓட‌ வேண்டாம்.

2 comments:

Truthful WalKing said...

is it ur imagination or real? i never knew any of this stuff... but good sense of humor..

That Adhu But said...

LOL...